அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர்.சி இயக்கி நடித்திருக்கும் படம் கேங்கர்ஸ். இதில் சுந்தர்.சி உடன் வடிவேலு, கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. வடிவேலு, சுந்தர் சியின் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தின் சிறப்பு காட்சி ஒன்று கடந்த வாரம் தமிழகத்தில் உள்ள முக்கியமான விநியோகஸ்தர்கள் மற்றும் சில திரையரங்க உரிமையாளர்களுக்கு படம் காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்து அனைவரையும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வடிவேலு அவர்களின் காமெடி பெரிதும் பேசப்படும் என்றும் மீண்டும் கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்குவார் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் ஓடிடி உரிமையை பெரும் விலைக்கு விற்க ஏற்பாடுகள் நடக்கிறது. இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 24 அன்று திரைக்கு வருகிறது.