பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

பிரிட்டிஷ் - இந்திய திரைப்பட இயக்குனர் சந்தியா சூரி இயக்கிய 'சந்தோஷ்' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக, இங்கிலாந்து சார்பாக பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படம். இப்படம் கடந்த வருடத்தில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது.
அப்படத்தை இந்தியாவில் திரையிடுவதற்காக தணிக்கைக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், படத்தில் உள்ள சில பல வசனங்கள், காட்சிகளை நீக்க வேண்டுமென தணிக்கைத் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், அதை நீக்க மறுத்துள்ளார் இயக்குனர். எனவே, படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது.
அப்படி தடை விதிக்கப்பட்ட 'சந்தோஷ்' திரைப்படத்தை சென்னையில் இன்று ஆரம்பமாகும் பி.கே.ரோஸி திரைப்பட விழாவில் ஏப்ரல் 6ம் தேதி காலை 9 மணிக்கு திரையிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள். இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் இந்தத் திரைப்பட விழாவை நடத்துகிறது.
இந்தியாவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஒரு திரைப்படத்தை திரைப்பட விழாக்களில் மட்டும் திரையிட அனுமதித்துள்ளார்களா என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.