"எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? | 'தி ராஜா சாப்' படத்தில் 'டூப்' பயன்படுத்தினேனா?: மாளவிகா மோகனன் விளக்கம் | 'கருப்பு' ரிலீஸ் - அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி | 'தாய் கிழவி' ரிலீஸ் ஒத்தி வைப்பு ஏன் ? | பிளாஷ்பேக்: முரணான தலைப்பு, முத்தான வெற்றி, முயற்சித்து சாதித்த இயக்குநர் கே பாக்யராஜ் | 'சூர்யா- 46' படத்தின் டைட்டில், ரிலீஸ் குறித்த தகவல் வெளியானது! | பிளாஷ்பேக்: வாள்வீச்சு நாயகன் ரஞ்சனின் வெள்ளித்திரை வரவுக்கு வித்திட்ட “ரிஷ்யசிருங்கர்” | கவர்ச்சி மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்த கயாடு லோஹர்! |

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் (பெப்சி) தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. சம்பள உயர்வு, திரைப்பட தயாரிப்பு செலவினங்கள் தொடர்பாக இரு சங்கத்திற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் யாரை வைத்து வேண்டுமானாலும் படம் தயாரிக்கலாம் என்றும் அறிவித்தது.
இந்த நிலையில் மற்றொரு சங்கமான பாரதிராஜா தலைமையிலான தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், பெப்சி தொழிலாளர்களை கொண்டே பணிகளை செய்வோம் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சமீபத்தில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமும் இணைந்து தொழிலாளர்கள் மறு சீரமைப்பு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றிய பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் நிலுவையில் இருந்த பல்வேறு தொழிலாளர் சங்கங்களுக்கான தொழிலாளர் மறுசீரமைப்பு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன உறுப்பினர்களை வைத்து மட்டுமே படப்பிடிப்பு நடத்துவது என்று உறுதி செய்யப்பட்டது. இந்த முடிவின்படி தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு ஆதரவு வழங்குகிறது. மேற்படி மறுசீரமைப்பு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் வருகிற மே மாதம் முதல் அமுலுக்கு வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.