ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமை நாகேஷ். கதாநாயகன், காமெடியன், வில்லன், குணசித்ர நடிகன் என பன்முகம் கொண்டவர். சினிமா பற்றிய ஞானம் கொண்டவர். அப்படிப்பட்டவர் கே.பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் வற்புறுத்தியும் படம் எதையும் இயக்கவில்லை. "நான் ஜாலியான ஆளு, டைரக்ஷன் டென்ஷனான வேலை அது எனக்கு சரிப்பட்டு வராது" என்று கூறிவிடுவார்.
அப்படி இருந்தும் அவர் ஒரே ஒரு படத்தை இயக்கினார். அந்த படம் 'பார்த்த ஞாபகம் இல்லையோ'. இது அவர் தன் மகனுக்காக இயக்கியது. மகன் ஆனந்த் பாபு சினிமாவில் அறிமுமாகி மளமளவென பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. ஒரு வெற்றிப் படத்தின் மூலம் அவரை தூக்கி நிறுத்த வேண்டிய கடமை அப்பா நாகேஷிற்கு இருந்தது. அதனால் அவர் முதன் முறையாக இயக்குனராக மாறி இந்த படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் ஆனந்த் பாபுவுடன் ரம்யா கிருஷ்ணன், ராதாரவி, தேங்காய் சீனிவாசன், ஆர்.எஸ்.மனோகர் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இரட்டை சகோதரிகள் சிறு வயதிலேயே பிரிந்து விடுகிறார்கள். ஒருத்தி பணக்கார வீட்டிலும், இன்னொருத்தி ஏழை வீட்டிலும் வளர்க்கப்படுகிறார்கள். இருவரையும் வைத்து ஆள்மாறாட்ட கதையாக காமெடி கலந்து படம் உருவானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. நாகேசும் தொடர்ந்து படம் இயக்கவில்லை.