2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட பின் அதில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் புகழ் வெளிச்சம் கிடைத்து வருகிறது. குறிப்பாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக துடிக்கும் சில இளைஞர்கள் இதை பயன்படுத்தி முன்னேற முயற்சிக்கிறார்கள். அந்த வகையில் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின் தற்போது இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்டார்.
இதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான தர்ஷன், முகேன், பாலாஜி முருகதாஸ், ஆரவ் போன்றவர்களும் சினிமாவில் கதாநாயகர்களாக அடியெடுத்து வைத்தனர். ஆனால் கிடைத்த வாய்ப்பை அவர்கள் பெரிய அளவில் தக்க வைக்கவில்லை. இதில் ஆரவ் மட்டுமே கலகத்தலைவன் படம் மூலமாக வில்லனாக நடித்து பாராட்டு பெற்று, தற்போது அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 வின்னரான ராஜூ ஜெயமோகன் தற்போது பன் பட்டர் ஜாம் என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தை இயக்குனர் ராகவ் மிர்தத் என்பவர் இயக்குகிறார். இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறதாம்.
குறிப்பாக நாகேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்த எதிர்நீச்சல் படங்களின் பாணியில் இந்த படம் இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் ராகவ். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்கிற படத்தில் கவினுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ராஜூ ஜெயமோகன். தற்போது கிடைத்துள்ள இந்தவாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.