ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமாவையும் தாண்டி பாலிவுட் வரை கால் பதித்து விட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதிலும் கடந்த வருடம் வெளியான அனிமல் திரைப்படத்தின் வெற்றி பாலிவுட்டிலும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது சல்மான் கானுக்கு ஜோடியாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்கந்தர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. இந்த படமும் வெற்றி படமாக அமைந்துவிட்டால் பாலிவுட்டில் ராஷ்மிகாவுக்கு என ஒரு நிலையான இடம் கிடைத்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
வரும் மார்ச் 30ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டமாக இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இது குறித்த புரமோஷன் நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அது மட்டுமல்ல படம் குறித்த தகவல்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவிடம் உங்களுடைய மிகப்பெரிய பயம் எது என்கிற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ராஷ்மிகா கூறும்போது, “மிக உயரமான இடங்களும் ஆழமான தண்ணீர் பகுதியும் எனக்கு எப்போதுமே பயம் தருபவை” என்று கூறியுள்ளார்.