அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது | பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? |
நடிகை சமந்தாவை பொறுத்தவரை ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்தது போன்று ஒரு பரபரப்பான பிசியான நடிகையாக இல்லாமல் தற்போது வாழ்க்கையை தன் போக்கில் வாழ வேண்டும் என்கிற ஒரு புதிய லைப் ஸ்டைலுக்குள் அடி எடுத்து வைத்துள்ளார். அவரது காதல் திருமண முறிவு, அதன் பிறகு அவர் சந்தித்த சரும நோய் பிரச்சனைகள், பின்னர் மையோசிட்டிஸ் என்கிற நோய் தாக்கம் ,அதிலிருந்து போராடி மீண்டு வந்தது இவை எல்லாம் கூட சமந்தாவின் இந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம். அதனால் செலக்டிவான படங்களில் மட்டுமே நடித்து வரும் சமந்தா வெப் சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும் அடிக்கடி ஆன்மிக பயணங்களும் சுற்றுப்பயணங்களும் மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவை சுற்றி பார்த்து அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சமந்தா. அங்குள்ள கங்காருகளையும் கோலாக்களையும் இயற்கை அழகையும் பார்த்து ரசித்தது குறித்து தனது உணர்வுகளையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் குறித்து ஒரு ரசிகர் இவற்றையெல்லாம் யார் எடுத்தார்கள் என்கிற தந்திரமான ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.
காரணம் சமீபநாட்களாக சமந்தா பேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குனர்களில் ஒருவரான ராஜ் நிடிமொருவுடன் மிக நெருக்கமாக பழகி வருகிறார் என்பதால் அவரும் இந்த பயணத்தில் இணைந்து இருப்பாரோ, அவர்தான் இந்த புகைப்படங்களை எடுத்து இருப்பாரோ என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அவரது கேள்வியில் இருந்தது. ஆனால் அதற்கு பதில் அளித்த சமந்தா, சிட்னி சுற்றுலா கைடான நவோமி என்பவர் தான் இந்த புகைப்படங்களை எடுத்தார் என பதில் கூறி ரசிகரின் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதனிடையே வனவிலங்கு பூங்கா சென்ற வீடியோ, போட்டோக்களை பகிர்ந்து சமந்தா வெளியிட்ட பதிவில், கங்காருக்களுக்கு உணவளிப்பதிலிருந்து தூக்கத்தில் இருக்கும் கோலாக்களை பார்ப்பது வரை அது மிகவும் அழகான நேரம். வன விலங்குகளுடன் நேரத்தை செலவிட்டு இயற்கையின் அழகை அமைதியை ரசித்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.