புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? | அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! | டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? |
தமிழ் சினிமாவில் வந்து நடிக்கும் மற்ற மொழி நடிகர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கூடிக் கொண்டே போகிறது. மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்து நடிக்கும் நடிகர்கள் அந்தக் காலத்திலிருந்தே இருக்கிறது.
தெலுங்கு, ஹிந்தியிலிருந்து ஹீரோயின்கள் அதிகமாக வருவார்கள். மலையாளம், தெலுங்கிலிருந்து வில்லன் நடிகர்கள் அதிகம் வருவார்கள். இப்போது பலதரப்பட்ட கதாபாத்திரங்களுக்கும் வர ஆரம்பித்துள்ளார்கள்.
நேற்று வெளியான 'வீர தீர சூரன் 2' படத்தின் மூலம் மலையாள நடிகரான சூரஜ் வெஞ்சாரமூடு தமிழில் அறிமுகமாகியுள்ளார். மிமிக்ரி கலைஞரான தனது கலை வாழ்க்கையை ஆரம்பித்தவர் தற்போது மலையாள சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' மலையாளப் படம் மூலம் தெரிந்திருப்பார்.
இவரை அடுத்து 'கூலி' படத்தில் மலையாள நடிகரான சவுபின் ஷாகிர் அறிமுகமாக உள்ளார். உதவி இயக்குனராக இருந்து நடிகராக வளர்ந்தவர். 'மஞ்சுமேல் பாய்ஸ்' மலையாளப் படம் இவரை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது.
மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான் உள்ளிட்ட பலரும் அவ்வப்போது தமிழ் சினிமாவில் வந்து நடித்துவிட்டுப் போவார்கள். இந்தப் பட்டியல் வரும் காலங்களில் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.