'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடிப்பில் வருகின்ற ஏப்ரல் 4ம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள படம் 'டெஸ்ட்'. இதற்கான புரொமோசன் நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாதவன் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, "நான் பெற்ற தேசிய விருதை யாரும் பெரிதாக கொண்டாடவில்லை. தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் படம் இருந்ததால், யாரும் அதை முழுமையாக உரிமை கோரவில்லை. அதற்காக எந்த விழாவும் நடத்தப்படவில்லை. முதலில் இது எனக்கு சிறிது வருத்தம் அளித்தது. பின்னர் நான் ஏன் படம் இயக்குகிறேன் என்கிற கேள்வியை என்னிடமே கேட்டுக் கொண்டேன். என் மனதில் ஒரு கதை இருக்கிறது. அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்பதை உணர்ந்தேன்" என தெரிவித்துள்ளார்.