தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? | என்னை சுயநலத்துக்காக பயன்படுத்துபவர்கள் இன்னும் நல்லா பயன்படுத்திகோங்க : விஜய் சேதுபதி |
தமிழ் சினிமா உலகை பொறுத்த வரை வாரம் வாரம் படங்கள் வெளியாவதும் அதில் எந்த படமும் வெற்றியை பெரிதளவில் தேடி தருவதில்லை. அந்த வகையில் இந்த வாரமும் நேரடி தமிழ் படமாக மொத்தம் 4 படங்கள் வெளியாகியது. அவற்றின் வசூல் நிலவரங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
வீர தீர சூரன் : அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பல சிக்கல்களுக்கு நடுவே மாலை காட்சிகள் முதல் மார்ச் 27 அன்று வெளியானது. வெளியான முதல் நாள் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதிக அளவில் வசூல் ஈட்டவில்லை என்பதே உண்மை. அதேசமயம் இன்று முதல் திங்கள் வரை தொடர் விடுமுறை என்பதால் படத்திற்கு வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தி டோர் : நடிகை பாவனாவை சில ஆண்டுகளுக்கு பிறகு நாம் திரையில் பார்த்த படம் தி டோர். ஜெயதேவ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் ஹாரர் திரில்லராக வந்தது. ஆங்காங்கே சில இடங்களில் மட்டுமே காட்சிகள் போடப்பட்டது. மற்ற எங்கும் இந்த திரைப்படம் ஜொலிக்கவேயில்லை.
வெட்டு : அம்மா ராஜசேகர் எழுதி இயக்கியிருந்த இந்த படமும் இந்த வாரம் வெளியாகியது. ஆனால் வெளியிட்ட திரையரங்கம் முழுவதும் காற்று வாங்கியதே மிச்சம் என்று சொல்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.
அறம் செய் : பாலு வைத்தியநாதன் இயக்கத்தில் அவரே நாயகனாகவும் நடித்த படம் அறம் செய். இந்த திரைப்படம் இந்த வாரம் வெளியாகியுள்ள நிலையில் ஒரே ஒரு காட்சி கூட அரங்கம் நிறைந்த காட்சியாக எங்குமே நிற்கவில்லை என்பதே உண்மை. வெளியிட்ட பல இடங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதே மிச்சம்.
எம்புரான் : பிருத்விராஜ், மோகன்லால் கூட்டணியில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியது. வெளியான முதல் நாள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு இருந்தாலும் அடுத்த நாளே படம் டல் அடிக்க துவங்கியது.