கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் | தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலாவின் 'கிஸ்' | ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் | நான் இன்னும் மிடில் கிளாஸ் தான்... என் சாதனைக்கு உரியவர் ஷாலினி : அஜித் பேட்டி |
தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு தயாரித்து நடிக்கும் படம் 'கண்ணப்பா'. சிவனை வழிபட்ட 64 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் வரலாறு தான் இந்த படம். இதில் கண்ணப்பராக விஷ்ணு மஞ்சு நடிக்கிறார். சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மோகன்லால், பிரபாஸ், அக்ஷய்குமார் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். படம் வரும் ஏப்ரல் 25ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகவுள்ளது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரை சமூக வலைத்தளத்தில் டிரோல் செய்து வருகிறார்கள். இதனால் கோபம் அடைந்த இந்த படத்தில் கண்ணப்ப நாயனாரின் நண்பர் மல்லு என்ற கேரக்டரில் நடித்துள்ள நடிகர் ரகு பாபு "இந்தப் படத்தை யார் ட்ரோல் செய்தாலும், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், கடவுள் சிவனின் கோபத்துக்கு ஆளாவார்கள். இது 100 சதவீதம் உண்மை. அது யாராக இருந்தாலும் அவர் அவ்வளவுதான்” என்று கூறியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.