குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
தமிழ் நடிகர் கமல்ஹாசனுக்கு இந்தியாவிலுள்ள பல மொழிகளில் சரளமாக பேசத் தெரியும். சில பத்திரிகையாளர் சந்திப்பில்கூட, வெவ்வேறு மொழி நிருபர்களின் கேள்விகளுக்கு அவர்கள் எந்த மொழியில் கேள்வி கேட்கிறார்களோ அதே மொழியில் அவரும் பதிலளிப்பார். அப்படி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகள் கமலுக்கு அத்துபடி.
ஆனால் கமல் இத்தனை மொழிகள் பேசுவார் என்ற விவரம் தெரியாத பேராசிரியர் ஞானசம்பந்தன், கேரள நாட்டிளம் பெண்களுடனே என்றொரு படத்தில் நடிக்கிறேன். தமிழ் படமென்றாலும் இதில் மலையாளத்தில் நான் பேச வேண்டுமாம். மலையாளம் தெரியாத நான் அப்படத்தில் எப்படி நடிப்பது என்ற யோசனையில் இருக்கிறேன் என்று கமலிடம் சொன்னாராம்.
அதற்கு, யாமிருக்க பயமேன் என்றாராம் கமல். என்ன சொல்கிறீர்கள்? என்று பேராசிரியர் கேட்டதற்கு, எனக்கு மலையாளம் நன்றாக தெரியும். அதனால் ஒரு வாரம் என்னிடம் டியூசன் பயில வாருங்கள். உங்களை ஒரு கேரளத்து சேட்டன் போலவே மலையாளம் பேச வைக்கிறேன் என்று சொன்னவர், முறையாக மலையாளத்தை சொல்லிக்கொடுத்தாராம். அதன்பிறகுதான் அப்படத்தில் மலையாளம் பேசி நடித்திருக்கிறார் தமிழ் பேராசிரியரி ஞானசம்பந்தன்.