'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! | அரசு ஆணையை நிறைவேற்றிய கர்நாடகா தியேட்டர்கள் | கென் கருணாஸ் படத்தின் புதிய தகவல் இதோ! |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சேகர் கம்முலா. தற்போது தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'குபேரா' படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஜுன் 20ம் தேதி வெளியாகிறது.
சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய சேகர் கம்முலா, “குபேரா' படத்தை இயக்குவதில் பெருமையாக உணர்கிறேன். படத்தின் கதை தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா போன்ற நடிகர்களைக் கேட்டது. படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள். எனது படங்களில் நான் எந்த விதமான மெசேஜும் சொல்வதில்லை. அதேசமயம் நாட்டில் உள்ள சமுதாயக் கட்டமைப்பை எனது படங்கள் பாதிக்காத அளவில்தான் இருக்கும். எனது ஒவ்வொரு படத்திலும் இதை மனதில் வைத்தே கதை எழுதுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
'குபேரா' படம் வழக்கமான ஒரு படமாக இருக்காது, நிச்சயம் மாறுபட்ட ஒரு படமாக இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.