எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விக்ரம் | விஜய் உடன் நடந்த சந்திப்பு : அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு | பிளாஷ்பேக் : கமல்ஹாசனுடன் பெண் வேடத்தில் நடித்த சிவகுமார் | பிளஷ்பேக் : அன்று சிந்திய பாசம் | ஆக்ஷன் ஹீரோவான பிரஜின் | தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை : சீமா பிஸ்வாஸ் | ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'பெருசு' | ஓடிடியால் கூலி வெளியாவதில் சிக்கலா? | பிளாஷ்பேக்: வயது வந்தோருக்கான சான்றிதழ் பெற்று வெளிவந்த முதல் தமிழ்ப்படம் எம் ஜி ஆரின் “மர்மயோகி” | வீர தீர சூரன், எல் 2 : எம்புரான் தியேட்டரில் போட்ட போட்டி |
‛சர்தார் -2, வா வாத்தியார்' போன்ற படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்த படங்களை அடுத்து ‛டாணாக்காரன்' படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் அவரது 29வது படத்தில் நடிக்கவுள்ளார். ட்ரீம் வாரீயர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த படம் 1960களில் ராமேஸ்வரம் பின்னணியில் கடல் கொள்ளையர் கதைகளத்தில் உருவாகிறது. இந்தாண்டு மே மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் . இவரை தொடர்ந்து இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவர் தமிழில் ஹீரோ, மாநாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ‛ஜீனி' படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.