காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 வெளியாகுமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் வேலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
குட் பேட் அக்லி-யின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் அஜித் நடித்த பல படங்களை இந்த நிறுவனமே கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் குட் பேட் அக்லி படத்தின் ஓடிடி-யில் ஒளிபரப்பாகும் நாளை அவரது பிறந்த நாளான மே மாதம் 01-ந்தேதி அல்லது மே மாதம் முதல் வாரத்திலேயே வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இதனால் ரசிகர்கள் மிகவும் அதிரிச்சியில் உள்ளனர். படம் வெளியாகி ஒரு மாதத்திலே ஓடிடி தளத்தில் வெளியாவதை ரசிகர்கள் பெரும்பாலும் விரும்பாத நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒளிபரப்பாகும் தேதியை மாற்றி அமைக்கலாமா என்ற யோசனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.