22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
ராஜா(மோகன் ராஜா) இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில், ரவி மோகன்(ஜெயம் ரவி), அசின், நதியா, பிரகாஷ்ராஜ், விவேக் மற்றும் பலர் நடிப்பில் 2004ல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'எம் குமரன் S/o மகாலட்சுமி'. தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் வெளிவந்த 'அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி' படத்தின் ரீமேக்காக வெளிவந்த படம்.
ஜெயம் ரவியின் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று. ரீமேக் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கேற்றபடி படத்தை மாற்றியமைத்து சிறப்பான படமாகக் கொடுத்திருந்தார் ராஜா.
20 வருடங்களுக்குப் பிறகு அப்படம் இன்று ரீ-ரிலீஸ் ஆகிறது. படத்தில் ஜெயம் ரவியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நதியா இது குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். “எனக்குப் பிடித்த எம்.குமரன் S/o மகாலட்சுமி… என் வாழ்க்கையில் ஒரு மைல்கல் படம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகிறது. எல்லா வயதினரையும் கவர்ந்த மறக்க முடியாத ஒரு படத்தின் ஒரு பகுதியாக இருப்பது உண்மையிலேயே ஒரு இனிய அனுபவமாக இருந்தது” என குழுவினருக்கும் சேர்த்து நன்றி தெரிவித்துள்ளார்.