கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
நட்சத்திர திருமணங்கள் இந்தியாவில் வேறு எந்த திரையுலகையும் விட பாலிவுட்டில் தான் அதிகம் நடைபெறுகின்றன. அந்த வகையில் கடந்த வருடம் பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டதால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பல நாட்கள் அழுதேன் என்று கூறியுள்ளார் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் மகளான சான்வி.
இது குறித்து அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “கரண் ஜோஹர் இயக்கத்தில் வெளியான 'ஸ்டூடன்ட் ஆப் தி இயர்' என்கிற படத்தில் இருந்து நான் சித்தார்த் மல்ஹோத்ராவின் தீவிர ரசிகையாக இருந்தேன். என்னை அறியாமலேயே அவர் மீது ஒரு கிரஷ் ஏற்பட்டது. தொடர்ந்து எனது சோசியல் மீடியா பக்கத்தில் அவருடைய புகைப்படங்களாக பகிர்ந்து கொண்டு வந்தேன் ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட 700 புகைப்படங்களை நான் பகிர்ந்திருந்தேன்.
ஆனால் அவரது திருமணத்திற்கு பிறகு அனைத்து புகைப்படங்களையும் நான் நீக்கி விட்டேன். ஏனென்றால் ஒருவேளை சித்தார்த் அப்போது என்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் இடம்பெற்றுள்ள அவருடைய இந்த புகைப்படங்களை பார்க்கும் போது அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்பதாலேயே அவற்றை நீக்கி விட்டேன்” என்று கூறியுள்ளார் சான்வி. அது மட்டுமல்ல சித்தார்த்தின் திருமண வீடியோவை பார்த்தபோது ஒரு சோகப்படம் பார்ப்பது போலவே உணர்ந்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.