இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
வேட்டையன் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்த படத்தை ஆயிரம் கோடி வசூல் கிளப்பில் இணைத்து விட வேண்டும் என்பதற்காக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, மலையாள நடிகர் சவுபின் ஷாகிர், கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான் என பலமொழி நடிகர்களையும் நடிக்க வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இதன் காரணமாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தியில் கூலி படத்தை அதிகப்படியான தியேட்டரில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். நேற்றுமுன்தினம் படப்பிடிப்பு முடிந்தது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் , சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இப்படத்தை திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தேதியில் வேறு எந்த படமும் வெளியாக வில்லை என்பதால் கூலி படம் சிங்கிளாக களம் இறங்கப்போகிறது.