பொற்கோவில், வாகா எல்லை, ஜிலேபி… ஆண்ட்ரியாவின் பஞ்சாப் பயணம் | 'இந்தியன் 3' திட்டமிட்டபடி வெளியாகுமா? | பிளாஷ்பேக்: “கூண்டுக்கிளி” தந்த வேதனை; “குலேபகாவலி” தந்த சாதனை | 'ராபின்ஹூட்' படத்தில் ஆஸி., கிரிக்கெட் வீரர் வார்னரின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது | 'பெருசு' மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவுக்குத் தேவையா ? | நாக சைதன்யாவுடன் சேர்ந்து போட்ட 'டாட்டூ'வை அழித்துவிட்டாரா சமந்தா ? | குடித்துவிட்டு கார் ஓட்டிய இளைஞரால் பலியான பெண் ; ஜான்வி கபூர் கடும் கண்டனம் | முதல் நாள் தாக்கிவிட்டு மறுநாள் மன்னிப்பு கேட்டார் சல்மான்கான் ; நடிகர் அதி இராணி தகவல் | கடன் வாங்கி நடுத்தெருவுக்கு வந்தேன் - நீலிமா ராணி ஓப்பன் டாக் | இதயம் சீரியலிலிருந்து விலகிய கதாநாயகி |
சமீபத்தில் ஒரு தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறந்த வில்லன் நடிகருக்கான விருது எஸ்ஜே சூர்யாவிற்கு வழங்கப்பட்டது. அப்போது மேடையில் அவருக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக ஜப்பானிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்த அவரது ரசிகை மற்றும் அவரது குடும்பத்தினர் மேடையில் அவரை சந்தித்து தாங்கள் கொண்டு வந்த பரிசுகளை கொடுத்ததுடன் தங்களது வாழ்த்துகளையும் அழகான தமிழில் தெரிவித்தனர்.
அதே சமயம் எஸ்ஜே சூர்யா பேசும்போது, “ஜப்பானில் என்னுடைய வெறும் ஐந்து படங்கள் மட்டும் தான் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. ஆனால் இந்த அளவிற்கு அங்கே என்னை மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு பெருமையான விஷயம். இவர்களிடம் பேசும்போது உங்களுக்கு எந்த எந்த நடிகர்களை தெரியும் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் முதலில் விஜய் என்று சொன்னார்கள்” என்று கூறி பேச்சை நிறுத்தினார்.
அடுத்த பெயரை கூறுவதற்குள் அரங்கத்தில் இருந்தவர்கள் ஒரு நிமிடம் தொடர்ந்து கரகோஷம் எழுப்பியதால் பேசாமல் நின்ற எஸ்ஜே சூர்யா, அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆக விஜய்சேதுபதியின் பெயரை குறிப்பிட்டார், அடுத்து மூன்றாவது ஆக யார் பெயரை கூறப்போகிறார் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்தபோது மூன்றாவதாக தனது பெயரை குறிப்பிட்டார் எஸ்ஜே சூர்யா. இதற்கு பெரிதாக கைதட்டல் எதுவும் எழவில்லை. அதுமட்டுமல்ல இது குறித்த வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.
இதை பார்த்த பல ரசிகர்கள் குறிப்பாக ரஜினி ரசிகர்கள் பலரும் எஸ்ஜே சூர்யா மீதான தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். முதன்முதலாக ஜப்பானில் ரஜினிகாந்த் நடித்த 'முத்து' திரைப்படம் தான் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவருக்கு அங்கே 'டான்சிங் மகாராஜ்' என்ற பெயரே உண்டு. சொல்லப்போனால் ஜப்பானில் தமிழ் படங்களை திரையிடுவதற்கு வழிகாட்டியாக அமைந்தது ரஜினியின் படங்கள் தான். அங்குள்ள பெரும்பாலான ஜப்பானிய மக்களுக்கு ரஜினிகாந்தை நன்கு தெரியும்.
இங்கே ரஜினி படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் எல்லாம் ஜப்பானிலிருந்து கூட இங்கே வந்து படம் பார்த்து விட்டு செல்கிறார்கள். ஜப்பானிலும் ரஜினி பட ரிலீஸ் திருவிழா போல கொண்டாடப்படுகிறது. அப்படி இருக்கையில் அந்த ரசிகை ரஜினி பெயரை எஸ் ஜே சூர்யாவிடம் கூறினாரா, இல்லையா,, அல்லது அவர் கூறியதை எஸ்ஜே சூர்யா சொல்லாமல் விட்டு விட்டாரா ? என்று தங்களது கமெண்ட்களை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். ரஜினிகாந்தை விட விஜய்சேதுபதி, எஸ்ஜே சூர்யா ஜப்பானில் அவ்வளவு புகழ் பெற்றவர்களா என்ன என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.