பொற்கோவில், வாகா எல்லை, ஜிலேபி… ஆண்ட்ரியாவின் பஞ்சாப் பயணம் | 'இந்தியன் 3' திட்டமிட்டபடி வெளியாகுமா? | பிளாஷ்பேக்: “கூண்டுக்கிளி” தந்த வேதனை; “குலேபகாவலி” தந்த சாதனை | 'ராபின்ஹூட்' படத்தில் ஆஸி., கிரிக்கெட் வீரர் வார்னரின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது | 'பெருசு' மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவுக்குத் தேவையா ? | நாக சைதன்யாவுடன் சேர்ந்து போட்ட 'டாட்டூ'வை அழித்துவிட்டாரா சமந்தா ? | குடித்துவிட்டு கார் ஓட்டிய இளைஞரால் பலியான பெண் ; ஜான்வி கபூர் கடும் கண்டனம் | முதல் நாள் தாக்கிவிட்டு மறுநாள் மன்னிப்பு கேட்டார் சல்மான்கான் ; நடிகர் அதி இராணி தகவல் | கடன் வாங்கி நடுத்தெருவுக்கு வந்தேன் - நீலிமா ராணி ஓப்பன் டாக் | இதயம் சீரியலிலிருந்து விலகிய கதாநாயகி |
சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் 2021ல் 'புஷ்பா', 2024ல் 'புஷ்பா 2' ஆகிய படங்கள் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. 'புஷ்பா 2' படம் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனை புரிந்தது.
அப்படத்தின் மூன்றாம் பாகம் பற்றிய அப்டேட் ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் ரவிசங்கர் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 'புஷ்பா 3' படம் 2028ம் ஆண்டு வெளியாகும் என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் ரவிசங்கர் கூறுகையில், ''புஷ்பா மூன்றாம் பகம் கண்டிப்பாக எடுப்போம். அட்லி,
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் அடுத்தடுத்து கமிட்டாகி
இருக்கிறார். அதை முடித்துவிட்டு புஷ்பா மூன்றாம் பாகத்தில் நடிப்பார்.
இயக்குநர் சுகுமாரும் ராம் சரணுடனான படத்தை முடித்துவிட்டு 'புஷ்பா 3'
படத்திற்கான வேலைகளை துவங்குவார். 2028ல் 'புஷ்பா 3' திரையரங்கிற்கு
வரும்" எனக் கூறியுள்ளார்.
முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் இடையிலும் மூன்று வருட இடைவெளி இருந்தது. ஆனால், மூன்றாம் பாகத்திற்கான இடைவெளிக்கு அல்லு அர்ஜுன் வேறு இரண்டு படங்களில் நடிக்க இருப்பதுதான் காரணம்.
மூன்றாம் பாகம் பற்றிய அப்டேட்டைத் தயாரிப்பாளர் தந்ததற்கு அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.