தாரா நடிகையின், 'ஹீரோயின்' மார்க்கெட் சரிந்திருக்கும் நேரம் பார்த்து, சில மூன்றாம் தட்டு, 'ஹீரோ'கள் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க, அவர் வீட்டு கதவை தட்டி வருகின்றனர்.
ஆனால், அம்மணியோ, 'ஹீரோயின் மார்க்கெட் சரிந்தாலும், முன்னணி, 'ஹீரோ'களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடிப்பேன். 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும், மூன்றாம் தட்டு, 'ஹீரோ'களுக்கு ஜோடியாக நடிக்க, ஒரு நாளும் இறங்கி வர மாட்டேன்...' என, தன்னை துரத்தி வந்த அந்த நடிகர்களுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்து அனுப்பியுள்ளார், தாரா நடிகை.