ஸ்பெயினிலும் சாதித்த அஜித் அணி: 3ம் இடம் பிடித்து அசத்தல் | அக்டோபர் 5ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன்- 9 ஆரம்பம்! | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகிறது! | என் சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்! - புகைப்படங்களுடன் ஷாலினி வெளியிட்ட பதிவு | பிளாஷ்பேக்: 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க ஆசைப்பட்டு, முடியாமல் போன திரைப்படம் | 'ஓஜி' வரவேற்பு: பிரியங்கா மோகன் தெரிவித்த நன்றி | ‛தி பாரடைஸ்' படத்திலிருந்து மோகன் பாபு பர்ஸ்ட் லுக் வெளியானது! | தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ‛நோ' சொன்ன ருக்மணி வசந்த்.. ‛எஸ்' சொன்ன கீர்த்தி சுரேஷ்! | இளவட்ட இயக்குனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகை |
சிவாஜிராவ் கெய்க்வாட் கே.பாலச்சந்தரால் ரஜினிகாந்த் ஆனார். ரசிகர்களால் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். ஆனால் ரஜினி என்ற பெயர் சினிமாவிற்கு புதிதல்ல. 1940களின் இறுதி பகுதியில் ரஜினி என்ற பெயரில் ஒரு நடிகை இருந்தார்.
புதுக்கோட்டையை சேர்ந்த மேடை நடன கலைஞர் இவர். இயற்பெயர் கோவிந்தம்மாள். ஆனால் இந்த பெயரை ராஜாபாலா என்று மாற்றிக் கொண்டு சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமானார். பல படங்களில் குரூப் நடனங்களில் ஆடினார். தமிழ், தெலுங்கு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.
அந்த காலத்தில் ஒரு ஹேர் ஆயில் விளம்பரத்திற்கு போஸ் கொடுத்தார். பிளவுஸ் அணியாமல் நீண்ட தலைமுடியுடன் அவர் கொடுத்த போஸ் பிரபலமானது. தமிழகம் முழுக்க அந்த விளம்பர போர்ட் அமைக்கப்பட்டது. அதன் மூலம் பிரபலமான அவர் 'மதனமாலா' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அப்போது தனது பெயரை ரஜினி என்று மாற்றிக் கொண்டார். இந்த படத்தில் அவர் நடன கலைஞராகவே நடித்தார்.
மன்னரின் அரசவை நாட்டியக்காரி மதனமாலா. அந்த அரசவைக்கு வரும் கவிஞர் விக்ரமன் என்பவர் மன்னனை புகழ்ந்து பாடுகிறார். அந்த பாடலுக்கு மதனமாலா நடனம் ஆடுகிறார். பாடல் முடிந்ததும் மகிழ்ந்துபோன மன்னர் என்ன வேண்டும் கேள் என்று விக்ரமனை கேட்கிறார். அதற்கு அவர் மதனமாலா என் மனைவியாக வேண்டும் என்கிறார். இதனால் கோபம் அடையும் மன்னர், விக்ரமனை நாடு கடத்துகிறார். மதனமாலாவை தனது ஆசை நாயகியாக வைத்துக் கொள்ள மன்னர் திட்டமிடுகிறார். நாடு கடத்தப்பட்ட விக்ரமன் எப்படி மதனமாலாவை மனைவியாக அடைகிறார் என்பதுதான் படத்தின் கதை.
இந்த படம் வெற்றி பெற்றாலும் ரஜினிக்கு தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. இரண்டாவது நாயகி, குணசித்ர வேடங்களில் நடித்தார். சென்னை புரசைவாக்கத்தில் நீண்ட காலம் வாழ்ந்து மறைந்தார்.