‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது |

ஒருவரே சினிமாவின் பல துறைகளை கையாண்டு ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். முதன்முறையாக லாவண்யா என்ற பெண் இயக்குனர் 32 துறைகளை கையாண்டு 'பேய் கொட்டு' என்ற படத்தை உருவாக்கி உள்ளார். திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, ஒளிப்பதிவு, எடிட்டங் உள்ளிட்ட துறைகளை கையாண்டிருப்பதுடன் அவரே நடிக்கவும் செய்துள்ளார்.
லாவண்யாவுடன் தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், இலும்பு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படம் வருகிற 21ம் தேதி வெளிவருகிறது.
இதுகுறித்து லாவண்யா கூறும்போது "கணவன், குழந்தை என வாழ்கிற ஒரு சாதாரண பெண்தான் நான். ஆனால் எனக்குள் சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் இருக்கிறது. நன்றாக பாடுவேன், ஆடுவேன், நடிப்பேன், படம் இயக்குவேன், கேமரா கையாளத் தெரியும். இதை கொண்டு சினிமா வாய்ப்பு தேடினால் அட்ஜெஸ்மெண்ட் பண்றீங்களா, இன்வெஸ்ட்மெண்ட் பண்றீங்களா? என்றுதான் கேட்டார்கள். அப்போதுதான் எனது மனதில் ஒரு வைராக்கியம் உண்டானது. ஒரு பெண்ணால் சினிமாவில் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த படத்தை நான் உருவாக்கினேன். படம் சொல்லும் கருத்தும் அதுதான்" என்றார்.