2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ஆர்யா , சந்தானம், நயன்தாரா நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. விஜயலட்சுமி, சித்ரா லட்சுமணன், ஷகிலா, மொட்டை ராஜேந்திரன், சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தை எம்.ராஜேஷ் இயக்கியிருந்தார். படத்தில் ஆர்யா - சந்தானம் காமெடி அனைவரையும் ரசிக்கச் செய்தது. குறிப்பாக 'நண்பேண்டா...' என்ற வார்த்தை பிரபலமானது. இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. வருகிற 21ம் தேதி 50க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படத்தை அமிர்தா பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.