அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கன்னட திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராகிணி திவேதி. இவர் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதையடுத்து மீண்டும் திரைப்படங்களில் ராகினி திவேதி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பெங்களூருவில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் நடிகை ராகினி திவேதி கலந்து கொண்டார். அப்போது அவருடன் செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் ரசிகர்கள் முண்டியடித்தனர். ஒரு ரசிகர், ராகினி திவேதியின் கையை பிடித்து இழுத்தார்.
இதனால் கோபமடைந்த நடிகை ராகினி திவேதி உடனே அந்த ரசிகரை கடுமையான வார்த்தைகளால் ஆங்கிலத்தில் திட்டியதோடு அவரது கன்னத்தில் பலமாக அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாவலர்கள் அந்த ரசிகரை அங்கிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.