காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜா, தனது அண்ணன் பாவலர் வரதராஜனால் தமிழக இசை உலகுக்கு அழைத்து வரப்பட்டார். சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் அளித்த ஊக்குவிப்பால், மேற்கத்திய இசை பயிற்சியில் ஈடுபட்டு, இன்று உலக மக்களை தனது இசையால் வசியப்படுத்தி உள்ளார். இதுவரை, 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த அவருக்கு, ஏற்னகவே மத்திய அரசு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கி கவுரவித்துள்ளது.
இதைதொடர்ந்து, 'வேலியன்ட்' என்ற தலைப்பில் அவர் உருவாக்கிய தனது முதல் சிம்பொனி இசையை லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவினருடன் இணைந்து, இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு அரங்கேற்றினார். 35 நாட்களில் எழுதிய இளையராஜா, சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். Eventim Apollo அரங்கத்தில் சிம்பொனி இசையை, மெய்மறந்து ரசிகர்கள் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் பால்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இளையராஜா மேடைக்கு வந்ததும் ரசிகர்களின் உற்சாக வரவேற்பால் அரங்கமே அதிர்ந்தது. ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிம்பொனி மட்டும் 45 நிமிடத்திற்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது.
சிம்பொனி அரங்கேற்றத்திற்கு பிறகு, மேடையில் பேசிய இளையராஜா, ''சிம்பொனியின் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சிம்பொனியை அனுபவித்தால்தான் புரியும்; அதை இன்று முதல்முறையாக அனுபவித்திருக்கிறீர்கள்'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.