மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்துள்ளார் அஜித் குமார். அவருடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் டிரைலர் இம்மாதம் இறுதியில் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருப்பதோடு, இந்த மாதம் இறுதியில் இப்படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்கும் தொடங்க இருப்பதாக கூறுகிறார்கள்.
அதேபோல் முதல் பாடல் குறித்தும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில்,இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், 'முதல் பாடல் விரைவில்.. சுடசுட ரெடி பண்ணிட்டு இருக்கோம்' என பதிலளித்தார். அதன்படி இந்த வாரம் முதல் பாடலும், இம்மாத இறுதியில் டிரைலரும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.