இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

அழுத்தமான கதைசொல்லல் மற்றும் வலுவான பெண் கதாநாயகிகளுக்காகப் பாராட்டப்பட்ட இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன், 'அருவி'யில் அதிதி பாலனையும், 'வாழ்' படத்தில் டி.ஜே. பானுவையும் அறிமுகப்படுத்தினார். இப்போது, 'சக்தி திருமகன்' படத்தில் திரிப்தி ரவீந்திராவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தி உள்ளார்.
திரிப்தி சமூக வலைத்தளங்களில் பிசியாக இயங்கி கொண்டிருப்பவர், சில விளம்பர படங்களிலும், குறும்படங்களிலும் நடித்துள்ளார். 'தி டே ஆப்' என்ற குறும்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளார். ஹிந்தியில் சின்னத்திரை தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பது இதுவே முதல் முறை.
'சக்தி திருமகன்' படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். இது அவருக்கு 25வது படமாகும். இவர்கள் தவிர வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், குழந்தை நடிகர் கேசவ் ஆகியோரும் நடித்துள்ளனர்.