2025ல் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை யார் ? | மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா! | ரெட்ரோ படம் சூர்யாவுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது! - கார்த்திக் சுப்பராஜ் | 500 கோடி நிகர வசூலைக் கடந்த 'ச்சாவா' | சினிமா துறையில் பாலின பாகுபாடு: மாதுரி தீக்சித் கவலை | பிரபு, வெற்றி இணைந்து நடித்து ரிலீசுக்கு தயாரான 'ராஜபுத்திரன்' | 'ஹிட் 3' பார்க்காதீர்கள்: நானி சொன்ன காரணம் தெரியுமா? | ''ரசிகர்கள் மாறிவிட்டாங்க...'': ஷில்பா ஷெட்டி | 'அவள்' பட இயக்குனருடன் இணைகிறாரா ரவி மோகன்? | பராசக்தி இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்! - ஆகாஷ் பாஸ்கரன் |
தஞ்சாவூர், தமயந்தி மகள் குசலகுமாரி என்பதே டி.டி.குசலகுமாரி. 3 வயதில் நடனம் ஆடத் தொடங்கியவர் அவர். குசலகுமாரிக்கு 5வயதிருக்கும்போது சென்னையில் குடியேறியது குடும்பம். சென்னை வித்யோதயா தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே 6 வயது சிறுமியான குசலகுமாரிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. டி.ஆர்.ரகுநாத், இளங்கோவன் இணைந்து இயக்கிய 'மகாமாயா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னியான டி.ஆர்.ராஜகுமாரி குசலகுமாரியின் அத்தை.
அத்தையுடன் அடிக்கடி படப்பிடிப்புக்கு வரும் குசலகுமாரியை பார்த்த ஜெமினி பட நிறுவனர் வாசன், குலசலகுமாரியை 'அவ்வையார்' படத்தில் இளம் வயது அவ்வையாராக நடிக்க வைத்தார். 'பராசத்தி' படத்தின் முதல் காட்சியே குலசகுமாரியின் குளோஸ்-அப் காட்சிதான். இந்த படத்தில் 'வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே' என்ற பாடலுக்கு அவர் ஆடினார்.
சிவாஜியும், எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படமான 'கூண்டுக்கிளி'யில் சிவாஜியைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஏழைப் பெண் 'சொக்கி'யாக நடித்தார். 16 வயதில் 'கொஞ்சும் சலங்கை' படத்தில் இடம்பெற்ற போட்டி நடனத்தில் குமாரி கமலாவுடன் இணைந்து இவர் ஆடிய ஆட்டம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.
50 படங்களுக்கு மேல் தனி நடனம் ஆடிய குசலகுமாரி முன்னணி நடிகர்களுக்கு தங்கையாக பல படங்களில் நடித்தார். இதனால் அவர் தங்கை நடிகையாவே மாறினார். இதனால் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் குறைந்தது. முன்னணி நடிகர்கள் தனக்கு தங்கையாக நடித்தவரை ஜோடியாக ஏற்க மறுத்தனர்.
என்றாலும் அவர் எம்ஜிஆர் தங்கையாக நடிக்காததால் 'மலைக்கள்ளன்' படத்தில் நடிக்க அவரை அணுகினார்கள். அப்போது அவர் என்.டி.ராமராவ் ஜோடியாக தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் எம்ஜிஆருடன் நடிக்க முடியாமல் போனது.
புகழ்பெற்ற நட்சத்திரமாக இருந்தாலும் தன் கடைசி காலத்தில் வறுமையில் வாழ்ந்தார். முதல்வர் ஜெயலலிதா அவருக்கு மாதம் 5 ஆயிரம் உதவி தொகை வழங்கினார். 2019ம் ஆண்டு தனது 82வது வயதில் காலமானார். இன்று அவரது 5வது நினைவு நாள்.