படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
நாக சைதன்யா நடித்து கடந்த மாதம் வெளியான 'தண்டேல்' தெலுங்குப் படம் 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. அவரது முதல் 100 கோடி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
'பொன்னியின் செல்வன்' நடிகையான சோபிதா துலிபலா உடன் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார் நாக சைதன்யா. திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த முதல் படமே 100 கோடி வசூலைத் தந்ததில் இருவருமே மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதனால், ஜாலியாக டூர் சென்றுள்ளனர். இருவரும் நெதர்லாந்து நாட்டிற்குச் சென்றுள்ளனர். 'தண்டேல்' படத்திற்காக நாக சைதன்யா ஊர் ஊராகச் சுற்றி நிறைய புரமோஷன் செய்தார். அதனால் ஓய்வெடுக்கவே மனைவியுடன் டூர் சென்றுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'தண்டேல்' பெற்ற வெற்றியால் அடுத்த படத்தையும் அது போலவே கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாராம் நாக சைதன்யா.