மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
வடிவேலுவும், சிங்கமுத்துவும் ஒரு காலத்தில் காமெடி நடிகர்களாக ஒன்றாக இருந்தார்கள். வடிவேலுவின் பல காமெடி காட்சிகளை சிங்கமுத்து எழுதினார். சிங்கமுத்து நடிப்பு தவிர ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். வடிவேலுவுக்கும் பல சொத்துகள் வாங்கி கொடுத்தார். இதில் அவர் தன்னை மோசடி செய்துவிட்டதாக வடிவேலு புகார் கூறினார். இது தொடர்பாக இருவரும் மோதிக் கொண்டனர்.
இந்த நிலையில் சிங்முத்து யு-டியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக சிங்கமுத்து தர வேண்டும் என்றும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு மாஸ்டர் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. நடிகர் வடிவேலு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதில், நடிகர் சிங்கமுத்து தனக்கு எதிராக தெரிவித்த அவதூறான கருத்துகள் குறித்து விளக்கம் அளித்தார். இந்த வாக்குமூலம் பதிவு அரை மணி நேரம் நடந்தது.
இதையடுத்து சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வக்கீல் “வடிவேலுவை குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். இதை பதிவு செய்து கொண்டு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
வடிவேலுவின் வாக்குமூலம் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு சிங்கமுத்து தரப்பு மனு செய்யலாம் என்று உத்தரவிட்டது.