110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : மதுரை தமிழ் பேச முடியாமல் பாரதிராஜா பட வாய்ப்பை இழந்த வசந்த் | பிளாஷ்பேக் : நடிகையான சர்க்கஸ் கலைஞர் | கிரிப்டோ கரன்சி மோசடி : காஜல், தமன்னாவுக்கு சம்மன் | முன்னணி ஹாலிவுட் நடிகர், நடிகை மரணம் | முருகதாஸ், சல்மானின் ‛சிக்கந்தர்' பட டீசர் வெளியானது | சப்தம் படத்தின் காலை காட்சி வெளியாகவில்லை |
பிரபல ஹாலிவுட் நடிகை மிச்செல் டிராட்சன்பெர்க். 1996ம் ஆண்டு வெளியான 'ஹாரியட் தி ஸ்பை' என்ற படம் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு இன்ஸ்பெக்டர் கெட்ஜெட், ஈரோ டிரிப், ஐஸ் பிரின்சஸ், பிளாக் கிறிஸ்துமஸ், காப் அவுட் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். பபி தி வாம்பயர் ஸ்லேயர், காசிப் கேர்ஸ் உள்ளிட்ட பல வெப் தொடர்களில் நடித்தும் புகழ் பெற்றார்.
39 வயதான மிச்செல் அமெரிக்காவில் உள்ள மான்ஹாட்டன் பகுதியில் வசித்து வந்தார். கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (26ம் தேதி) மிச்செல் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். மிச்செல் டிராட்சன்பெர்க் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இதேபோல பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேம்மேனும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. ஜீன் ஹேக்மேன் சூப்பர் மேன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். ஆஸ்கர்விருதுக்கு 5 முறை இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டு, இதில் அன்பர்கிவன், தி பிரெஞ்சு கனெக்சன் ஆகிய படங்களுக்காக ஆஸ்கார் விருதையும் பெற்றார்.
பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் இருந்து ஓய்வு பெற்ற இவர் மெக்சிகோவில் தனது மனைவி அரகாவுடன் சொந்த வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் மனைவியுடன் இறந்து கிடந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது சொத்துக்காக உறவினர்கள் கொலை செய்தார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.