'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் |
ஈரம் படத்திற்கு பிறகு இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛சப்தம்'. ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து ஹாரர் திரில்லர் படமாக தந்த இந்த கூட்டணி, இப்போது சப்தம் படத்தில் சப்தத்தை வைத்து வித்தியாசமான ஹாரர் திரில்லர் படமாக எடுத்துள்ளனர். இதில் சிம்ரன், லட்சுமி மேனன், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆல்பா பிரேம்ஸ், 7ஜி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, தமன் இசையமைத்துள்ளார்.
இந்த படம் இன்று(பிப்., 28) திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் காலையில் வெளியாகவில்லை. ஓடிடி மற்றும் சாட்டிலைட் பிரச்னையால் இந்த படத்தின் காலை காட்சி ரிலீஸாகவில்லை என கூறப்படுகிறது. அதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து தற்போது நண்பகலுக்கு பின் காட்சிகள் ஓபன் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தப்படம் நீண்டகால தயாரிப்பில் இருந்தது. அதுமட்டுமல்ல படத்தின் டிரைலர் மற்றும் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி படம் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வரும் நிலையில் படத்தின் காலை காட்சி வெளியாகாதது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.