110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : மதுரை தமிழ் பேச முடியாமல் பாரதிராஜா பட வாய்ப்பை இழந்த வசந்த் | பிளாஷ்பேக் : நடிகையான சர்க்கஸ் கலைஞர் | கிரிப்டோ கரன்சி மோசடி : காஜல், தமன்னாவுக்கு சம்மன் | முன்னணி ஹாலிவுட் நடிகர், நடிகை மரணம் | முருகதாஸ், சல்மானின் ‛சிக்கந்தர்' பட டீசர் வெளியானது | சப்தம் படத்தின் காலை காட்சி வெளியாகவில்லை |
கிரிப்டோ கரன்சி மோசடி என்பது நவீன உலகத்தில் தோன்றி உள்ள ஒரு புதுமையான மோசடியாகும். இப்படி ஒரு மோசடி புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த ஒய்வுபெற்ற தொலைபேசி இலாகா அதிகாரி அசோகன் என்பவருக்கு நடந்தது. ஒரு நாள் இவரது செல்போன் எண்ணுக்கு கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தகவல் வந்தது. அதை நம்பி பல்வேறு தவணைகளாக ஆன்லைன் மூலம் 98 லட்சத்தை அசோகன் முதலீடு செய்தார். இதற்காக அவருக்கு 9 கோடி லாபம் கிடைத்ததாக காண்பித்தது. இதனை அவர் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சித்தபோது முடியவில்லை. எனவே தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அசோகனின் புகாரை ஏற்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் கோவையை தலைமை இடமாக கொண்டு 'கேஷ்பேக்' என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி கிரிப்டோ கரன்சி மோசடி செய்து வந்த கோவையை சேர்ந்த நித்தீஷ் ஜெயின், அரவிந்த் குமார் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கும்பல் ஒடிசா, டில்லி, மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் 50 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது.
இதற்கிடையே 'கேஷ்பேக் நிறுவன விழாவில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் பங்கேற்றுள்னனர். மோசடி பணத்தில்தான் அவர்கள் கோடி கணக்கில் சம்பளம் பெற்றுள்ளனர். இவர்களுக்கான சம்பளம் எந்த வங்கி கணக்குகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது?. வாங்கிய சம்பளத்திற்கு வரி கட்டி உள்ளனரா? இது மோசடி நிறுவனம் என்பது அவர்களுக்கு முன்பே தெரியுமா? என்பது குறித்து அவர்களிடமே நேரடியாக விசாரிக்க முடிவு செய்தனர். இதனால் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.