110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : மதுரை தமிழ் பேச முடியாமல் பாரதிராஜா பட வாய்ப்பை இழந்த வசந்த் | பிளாஷ்பேக் : நடிகையான சர்க்கஸ் கலைஞர் | கிரிப்டோ கரன்சி மோசடி : காஜல், தமன்னாவுக்கு சம்மன் | முன்னணி ஹாலிவுட் நடிகர், நடிகை மரணம் | முருகதாஸ், சல்மானின் ‛சிக்கந்தர்' பட டீசர் வெளியானது | சப்தம் படத்தின் காலை காட்சி வெளியாகவில்லை |
தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர இயக்குனரான கே.சுப்ரமணியம் ஏராளமான நடிகைகளை அறிமுகப்படுத்திமனார். அவர்களில் ஒருவர் பி.எஸ்.சரோஜா. 1941ல் வெளியான 'மதன காமராஜன்' படத்தின் மூலம் நடன மங்கையாகத் திரையில் தோன்றிய சரோஜா, தொடர்ந்து பல படங்களில் நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்தார்.
பின்னர் அவரை கே.சுப்ரமணியம் 'விகட யோகி' படத்தில் நாயகியாக நடிக்க வைத்தார். பின்னர் எம்ஜிஆர், சிவாஜி இணைந்து நடித்த 'கூண்டுக்கிளி' படத்தில் நடித்த அவர் தனித்தனியாக இருவருடனும் ஏராளமான படங்களில் நடித்தார். கணவர் டி.ஆர்.ராமண்ணாவுடன் இணைந்து பட நிறுவனம் தொடங்கி ஏராளமான படங்களையும் தயாரித்தார். இப்படி எல்லாத்துறையிலும் சாதித்த பி.எஸ்.சரோஜா ஒரு சர்க்கஸ் கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.
சரோஜாவுக்கு கேரளம் பூர்வீகம் என்றாலும் சென்னையில்தான் பிறந்து, வளர்ந்தார். ராயபுரம் புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஒன்பது வயதுச் சிறுமியாக மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது சர்க்கஸ் அவரது வாழ்க்கைக்குள் நுழைகிறது. பள்ளி மைதானத்தில் முகாமிட்டிருந்தது 'தமிழ்நாடு சர்க்கஸ்'. தமிழ்க் கலைஞர்களைக் கொண்டு தமிழ் முதலாளிகளால் தொடங்கப்பட்டிருந்த சர்க்கஸ் கம்பெனி அது. இரவில் வண்ண விளக்குகள் மின்ன பேண்ட் வாத்திய ஒலியுடன் ஈர்த்த சர்க்கஸ் கூடாரம் பகலில் அமைதியாக இருக்கும்.
ஒருநாள் சர்க்கஸ் கூடாரத்தைக் கடந்து பள்ளிக்குப் போய்க்கொண்டிருந்த சரோஜா, கூடாரத்தின் உள்ளே உள்ளே நுழைந்துவிட்டார். அங்கே சிலம்பம், களரி, ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளில் ஈடுப்பட்டிருந்தார்கள் சர்க்கஸ் கலைஞர்கள். அவர்களுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தவர் சர்க்கஸ் வாத்தியார் டி.எம்.நமா. மதியம்வரை பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டுவிட்டு அங்கே ஒளிந்திருந்து சர்க்கஸ் பயிற்சிகளைக் கவனித்துக் கொண்டிருந்த சரோஜா ஒருநாள் சர்க்கஸ் ஆசிரியரிடம் பிடிபட்டார். சரோஜாவின் ஆர்வத்தை கவனித்த அவர் அவருக்கு சர்க்கஸ் கலையை கற்றுக் கொடுத்தார். அந்தரத்தில் பாய்ந்து விளையாடும் பார் விளையாட்டை கற்று தேர்ந்தார்.
ஒரு கட்டத்தில் சர்க்கஸ் கம்பெனி மூடப்பட்டதும், பெரிய நிகழ்ச்சிகளில் சர்க்கஸ் விளையாட்டை நடத்தினார்கள். ராயபுரத்தில் ராஜாஜி கலந்துகொண்ட பிரம்மாண்டமான காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கூட்டம் தொடங்கும் முன் தனது மாணவர்களைச் சாகசங்கள் செய்து காட்டச் செய்தார் வாத்தியார் நமா. இந்த சாகச நிகழ்ச்சியைக் கண்ட மக்கள் பலத்த ஆராவாரம் செய்து உற்சாகப்படுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சரோஜா தனது சர்க்கஸ் வித்தையை காட்டினார். இந்தக் கூட்டத்துக்கு ராஜாஜியுடன் வந்திருந்தார் காங்கிரஸ் பிரமுகரான தட்சிணாமூர்த்தி. ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிவந்த இவர், சரோஜாவின் அழகையும் சாகசத் திறமையையும் கண்டு ஆச்சரியப்பட்டுப்போனார். சரோஜா இருக்க வேண்டிய இடம் சர்க்கஸ் அல்ல சினிமா என்பதை உணர்ந்த அவர், மாதம் 45 ரூபாய் சம்பளத்துக்கு சரோஜாவை ஜெமினி ஸ்டூடியோவில் சேர்த்துவிட்டார். இங்கிருந்துதான் சரோஜாவின் சினிமா பயணம் தொடங்கியது.