பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? |

1980களில் அறிமுகமான அழகான நடிகர்களில் ஒருவர் எஸ்.என்.வசந்த். 1983ம் ஆண்டு பாரதிராஜா மண்வாசனை படத்தை தொடங்கினார். அன்றைக்கிருந்த கமல், ரஜினி மாதிரியான முன்னணி நடிகர்களை தவிர்த்து விட்டு இளம் நாயகர்களை அழைத்து ஆடிசன் நடத்தினார். அதில் தேர்வானார் வசந்த்.
வசந்த் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவருக்கு மதுரை தமிழ் பேச வரவில்லை. அதற்காக தனி பயிற்சி அளிக்கப்பட்டது. ஓரளவிற்கு பேச பழகினாலும் அவரால் கேமரா முன்னால் அதனை வெளிப்படுத்த முடியவில்லை. விஜயா கார்டனில் டெஸ்ட்ஷூட் நடத்தப்பட்டபோது ரேவதிக்கும், இவருக்கும் ஜோடிப் பொருத்தம் சரியாக அமையவில்லை. இந்த நிலையில் பாரதிராஜா மதுரைக்கு லொக்கேஷன் பார்க்க சென்ற இடத்தில் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட சென்றபோது அங்கு வளையல் கடை நடத்தி வந்த பாண்டியனை பார்த்து, இந்த பையன்தான் சரியான நபர் என்பதை கண்டறிந்து அவரையே நாயகன் ஆக்கினார்.
சென்னை திரும்பிய பாரதிராஜா, வசந்தை அழைத்து “உனக்கு வசனமும் வரவில்லை. உடலும் மிக மெலிந்து இருக்கிறார். அதனால் இன்னொருவரை தேர்வு செய்து விட்டேன். ஆனாலும் உன்னை ஏமாற்ற மாட்டேன். என் தம்பி ஜெயராஜ் ஒரு படம் தயாரிக்கிறான். அந்த படத்தில் நீதான் ஹீரோ” என்று கூறி. அதே ஆண்டில் தயாரான 'மெல்ல பேசுங்கள்' படத்தில் வசந்தை ஹீரோ ஆக்கினார். பாரதி-வாசு இயக்கிய இந்த படத்தில் வசந்த் ஜோடியாக பானுப்ரியா நடித்தார். அவருக்கும் இதுதான் அறிமுக படம்.
வசந்த் அதன்பிறகு பல படங்களில் நடித்தாலும் அவரால் முன்னணி நடிகராக முடியவில்லை. சினிமா வாய்ப்புகள் குறைந்ததும், சின்னத்திரை தொடர்களில் நடித்தார். சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராகவும் பணியாற்றினார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டு 2009ம் ஆண்டு தனது 54வது வயதில் காலமானார். மண்வாசனை படத்தில் வசந்த் நடித்திருந்தால் அவரது கேரியர் வேற மாதிரியாக இருந்திருக்கும். இதனை அவரே பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.