தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப் | மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சிவராஜ்குமார் | 110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : மதுரை தமிழ் பேச முடியாமல் பாரதிராஜா பட வாய்ப்பை இழந்த வசந்த் | பிளாஷ்பேக் : நடிகையான சர்க்கஸ் கலைஞர் | கிரிப்டோ கரன்சி மோசடி : காஜல், தமன்னாவுக்கு சம்மன் | முன்னணி ஹாலிவுட் நடிகர், நடிகை மரணம் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராஜமவுலி குறித்து சமூக வலைத்தளங்களில் நேற்று கடும் பரபரப்பு ஏற்பட்டது. அவரது 34 வருட கால நண்பரான ஸ்ரீனிவாஸ் ராவ் என்பவர் வீடியோ பதிவொன்றையும், ஒரு கடிதத்தையும் வெளியிட்டதுதான் அந்த பரபரப்புக்குக் காரணம்.
ராஜமவுலி மற்றும் அவரது மனைவி செய்யும் டார்ச்சரால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறும்போது, “நான் ராஜமவுலியுடன் எமதொங்கா படம் வரை நல்ல நட்புறவில் இருந்து வந்தேன். ஒரு பெண்ணுக்காக என்னை தூக்கி எறிந்து விட்டார் ராஜமவுலி. 55 வயதாகும் நான் இன்னும் திருமணம் செய்யாமல் தனி ஆளாக இருப்பதற்கு ராஜமவுலி தான் காரணம். அவருக்காக என் காதலை தியாகம் செய்தேன். என்னுடைய தற்கொலைக்கு காரணம் என்றால் அது ராஜமவுலியும் அவரது மனைவி ரமா இருவரும் தான்.
நானும் ராஜமவுலியும் மிக நெருங்கிய நட்பில் இருந்த விஷயம் விஷயம் இசையமைப்பாளர் கீரவாணி, தயாரிப்பாளர் சந்திரசேகர் ஏலட்டி, இயக்குனர் ஹனு ராகவபுடி உள்ளிட்டோருக்கு நன்றாகவே தெரியும். எங்களது இந்த நட்பில் ஒரு பெண் குறுக்கிடுவார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஒரு பெண்ணுக்காக என் வாழ்க்கையை அழித்து விட்டார் ராஜமவுலி” என்று கூறியுள்ளார் சீனிவாச ராவ்.
இது குறித்து ராஜமவுலி தரப்பிலிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை. அவர் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.