ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'டிராகன்'. இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மூன்று நாட்களிலேயே உலகளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த படத்தில் நடித்த கயாடு லோஹரின் பல்லவி கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை அளித்துள்ளனர். அவரின் இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், கயாடு லோஹர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கொஞ்சும் தமிழில் பேசி வெளியிட்ட வீடியோவில், ''எனக்கு எப்படி தொடங்குவது எனத் தெரியவில்லை. எனக்கும், டிராகனுக்கும், பல்லவி கதாபாத்திரத்துக்கும் கிடைக்கும் வரவேற்பு மிகையான ஒன்று. திரையரங்கில் எனக்கு நீங்கள் அடிக்கும் விசிலாகட்டும், இன்ஸ்டாவில் அழகான கமெண்ட்ஸ், எடிட் ஆகட்டும் இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
நான் தமிழ்ப்பொண்ணு இல்லை. தமிழும் சரியாக பேசவராது. ஆனால், நீங்கள் எனக்கு தரும் அன்பு விலைமதிப்பில்லாதது. இந்த அன்பை எனது படங்களின் மூலம் திருப்பி தருவேன். உங்களைப் பெருமைப்பட வைப்பேன்'' எனப் பேசியுள்ளார்.