டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : மதுரை தமிழ் பேச முடியாமல் பாரதிராஜா பட வாய்ப்பை இழந்த வசந்த் | பிளாஷ்பேக் : நடிகையான சர்க்கஸ் கலைஞர் | கிரிப்டோ கரன்சி மோசடி : காஜல், தமன்னாவுக்கு சம்மன் | முன்னணி ஹாலிவுட் நடிகர், நடிகை மரணம் | முருகதாஸ், சல்மானின் ‛சிக்கந்தர்' பட டீசர் வெளியானது | சப்தம் படத்தின் காலை காட்சி வெளியாகவில்லை | லூசிபர் எழுப்பிய கேள்விகளுக்கு எம்புரான் விடை சொல்லும் : பிரித்விராஜ் |
தமிழில் 'மிருகம்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆதி. “ஈரம், அரவான், மரகத நாணயம்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், தெலுங்கில் சில படங்களிலும் நடித்தவர் ஆதி. நடிகை நிக்கி கல்ரானியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்.
'ஈரம்' பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நாயகனாக நடித்துள்ள 'சப்தம்' படம் நாளை மறுதினம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்திற்காக தெலுங்கிலும் பல பேட்டிகளைக் கொடுத்துள்ளார் ஆதி. அதில் ஒன்றில், “நிக்கியுடனான எனது திருமண வாழ்க்கை இனிமையாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், சில சமயங்களில் ஆதராமில்லாமல் விவாகரத்து வதந்திகளை சில யு டியூப் சேனல்கள் பரப்புவது வலியைத் தருகிறது.
காதலிப்பதற்கு முன்பும், திருமணமாகி கணவன், மனைவி ஆன பின்னும் நானும் நிக்கியும் நல்ல நண்பர்கள். எங்கள் இதயத்தால் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இப்படியான வதந்திகள் பரவும் போது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. முதலில் இது எனக்கு வருத்தமாக இருந்தது. போகப் போக, வருமானத்திற்காக சில யு டியூப் சேனல்கள் இப்படி செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவற்றை கண்டு கொள்வதில்லை,” என்று கூறியுள்ளார்.