ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் |
'டாடா, ஸ்டார், பிளடி பெக்கர் படங்களை தொடர்ந்து நடிகர் கவின், தற்போது 'கிஸ், மாஸ்க்' மற்றும் நயன்தாராவுடன் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் கிஸ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. 'மாஸ்க்' படத்தை நடிகை ஆண்ட்ரியாவே தயாரித்து, நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர்களை படக்குழு இன்று வெளியிட்டது. நான்கு போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு, அதில் ஒன்றில் கவின் மாஸ்க் உடன் நிற்பது போலவும், இன்னொன்றில் ஆண்ட்ரியா துப்பாக்கியுடன் வில்லத்தனமாக சிரிப்பது போலவும் இடம்பெற்றுள்ளது.
ஒரு போஸ்டரில் கவின் - ஆண்ட்ரியா இருவரும் நேருக்குநேர் முறைத்தபடி நிற்கின்றனர். இந்த போஸ்டர்கள் தற்போது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழங்க அறிமுக இயக்குநர் வி.கர்ணன் அசோக் இயக்குகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.