கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
ஜெய்ப்பூர் அரண்மனையில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணத்திரைக் காவியம் என்ற பெருமிதத்தோடு வெளிவந்த திரைப்படம்தான் “அடிமைப் பெண்”. எம் ஜி ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில், எம் ஜி ஆர் நாயகனாக நடித்து, இயக்குநர் கே சங்கர் அதிக பொருட் செலவில் இயக்கிய திரைப்படமாக அமைந்தது இத்திரைப்படம். இதன் வெளிப்புறப் படப்பிடிப்பின் ஒரு பகுதியாக ஜெய்ப்பூர் அரண்மனையை தேர்வு செய்திருந்தனர் படக்குழுவினர். ஜெய்ப்பூர் அரண்மனையில் அதுவரை யாரும் படம் பிடிக்க இயலாத இடங்களில் எல்லாம் “அடிமைப் பெண்” திரைப்படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டு அன்றே பெரும் சாதனை புரிந்திருந்தனர். சாதாரணமாக அரண்மனை போல ஸ்டூடியோவிற்கு வெளியே பிரமாண்ட செட் ஒன்றை அமைத்துத்தான் படமாக்குவது வழக்கம். ஆனால் எம் ஜி ஆர் அதற்கும் ஒருபடி மேலேயே சென்று சாதித்திருந்தார் என்றால் அது மிகையன்று.
ஜெய்ப்பூர் அரண்மனைக்குள்ளேயே மற்றொரு அரண்மனை பகுதியை தன்னுடன் வந்த கலைஞர்களைக் கொண்டே கட்டவும் செய்திருந்தார் எம் ஜி ஆர். இத்திரைப்படத்திற்காக ஆயிரம் ஒட்டகங்களை வாடகை;கு அமர்த்தி, ஒவ்வொரு ஒட்டகத்திற்கும் நாள் ஒன்றுக்கு ரூபாய் 100 வீதமும், ஒட்டகம் ஓட்டி ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு ரூபாய் 100 வீதம் என சம்பளம் கொடுக்கப்பட்டதோடு, மனித உணவு மற்றும் ஒட்டங்களின் உணவு என ஒவ்வொரு நாளும் இதற்காக பல்லாயிரக் கணக்கான ரூபாய்கள் வாடகையாகவும், சவாரி செய்பவர்களுக்கென தனிச்சாப்பாடு என்று அனைத்து செலவினங்களையும் ஏற்றிருந்தது “எம் ஜி ஆர் பிக்சர்ஸ்”.
இன்றைய “பாகுபலி” திரைப்படத்தின் முன்னோடியாக பார்க்கப்படும் இத்திரைப்படம், 1969ஆம் ஆண்டு வெளிவந்தது. மற்ற ராஜா ராணி திரைப்படங்களிலிருந்து இத்திரைப்படத்திற்கென ஒரு தனிச்சிறப்பும் உண்டு. பேச்சுத் தமிழில் வெளிவந்த முதல் ராஜா ராணி திரைப்படம் என்ற அடையாளத்தோடு வெளிவந்த திரைப்படமாகவும் அறியப்படுவதுதான் இந்த “அடிமைப் பெண்” திரைப்படம்.