ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாலுமகேந்திரா. மூன்றாம் பிறை, மூடுபனி, வீடு, சந்தியாராகம் என தேசிய விருதுபெற்ற படைப்புகளை தந்தவர். அவரது திரைப்படங்கள் பற்றிய கருத்தரங்கம், விவாத அரங்கம் இரண்டு நாட்களாக சென்னை வேல்ஸ் பல்லைகழகத்தில் நடந்தது.
இதன்நிறைவு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, பல்கலைகழக வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ், நடிகை ரோகினி, நிழல்கள் ரவி, ராஜநாயகம் மற்றும் அகிலா பாலு மகேந்திரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைகழக வேந்தர் ஐசரி கணேஷ், 'தொலைநோக்கு திரைப்பட தயாரிப்பாளரின் கலைத்திறனை கவுரவித்தது மற்றும் எதிர்கால தலைமுறை திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இனி ஆண்டு தோறும் இந்த நிகழ்ச்சி நடக்கும். பாலச்சந்தர் , மகேந்திரன் உள்ளிட்ட படைப்பாளிகளுக்கும் இதுபோன்ற கருத்தரங்கு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்" என்றார்.