பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

சினிமா பிரபலங்கள் என்றாலே சில பல கோடிகளில் கார்களை வாங்கி அதன் மூலம் தனி 'கெத்து' காட்டுவார்கள். ஆனால், அவர்களில் ஒரு சிலர் அவ்வப்போது எளிமையான பயணங்களையும் மேற்கொள்வார்கள். நடிகை சமந்தா மும்பையில் ஆட்டோவில் பயணம் செய்ததை 'வைபிங்' எனத் தலைப்பிட்டு அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
தற்போது ஹிந்திப் படங்களில் நடிப்பதற்காக மும்பையில் ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளார் சமந்தா. தமிழில் அவர் புதிதாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. சமந்தா நடித்து 2023ல் வெளிவந்த 'குஷி' தெலுங்குப் படத்திற்குப் பிறகு கடந்த வருடம் ஒரு படம் கூட வெளியாகவில்லை. சிட்டாடல் என்ற வெப் தொடர் மட்டும் ஓடிடியில் வெளியானது. தெலுங்கில் மட்டுமே நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவரது கவனம் எல்லாம் ஹிந்தியில் மட்டுமே உள்ளது. ஹிந்தி வெப் சீரிஸ்களில் நடித்த பின் ஹிந்திப் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.




