‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
நடிகை கீர்த்தி சுரேஷ், 'பேபி ஜான்' படத்தின் மூலம் ஹிந்தியில் கால் பதித்தார். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் பரிச்சயமான நடிகையாக மாறியுள்ளார். இடையில் தனது காதலரை திருமணம் முடித்த அவர், தற்போது 'ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ராதிகா ஆப்தே உடன் இணைந்து 'அக்கா' எனும் வெப் தொடரிலும் நடித்து முடித்துள்ளார். இத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகிறது. இதன் டீசர் நேற்று (ஜன.,03) வெளியிடப்பட்டது. தர்மராஜ் எழுதி இயக்கியுள்ள இத்தொடரில் கீர்த்தி சுரேஷ் மிரட்டலான தாதா போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.