மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

நயன்தாரா, மாதவன், சித்தார்த், நடித்துள்ள 'டெஸ்ட்' படத்தை தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கி உள்ளார். தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர். இப்போது அவர் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார் . இந்தப் படத்துக்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். பாடகரான அவர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது : உலகின் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட மூன்று மனிதர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட்டில் ஒன்றிணையும் போது, அது அவர்களின் வாழ்வை மாற்றக்கூடிய முடிவுகளை எடுக்கக்கூடிய கட்டாயத்தைத் தூண்டுகிறது. இதுதான் படத்தின் கதை.
வாழ்க்கை ஒரு விளையாட்டு. வாழ்க்கைப் பயணம் என்றால் என்ன ..? வழியில் அவை சந்திக்கும் சவால்கள் என்னென்னவென்பதை, ஒரு விளையாட்டின் மூலமாக கண்ணாடி போல் பிரதிபலிப்பதே படத்தின் திரைக்கதை. மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் மற்றும் பலர் தங்களது நடிப்பை மிகவும் ஆழமாகவும் உணர்ச்சியோடும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். காதல், கனவு, லட்சியம், விருப்பம் மற்றும் கிரிக்கெட் என அனைத்தும் கலந்த கதையாக ஒவ்வொருவரின் மனதையும் தாக்கும். மிகவும் பவர்புல் தீம் கொண்ட படத்தினை உலகில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும், வழங்குவதில் பெருமை அடைகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




