விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
கடந்த வருடம் மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் 'ஆவேசம்' என்கிற திரைப்படம் வெளியானது. இயக்குனர் ஜித்து மாதவன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். ரங்கன் தாதா என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடித்திருந்தார். முழுக்க முழுக்க காமெடி கலந்த ஒரு கேங்ஸ்டர் படமாக வித்தியாசமான கதை சொல்லலில் இது உருவாகி இருந்தது.
மலையாளத்தையும் தாண்டி தமிழிலும் இந்த படம் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்ல ஹிந்தியிலும் இந்த படம் ரீமேக் ஆக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் இருக்கிறது என்று இந்த படத்தில் பஹத் பாசிலின் வலது கையாக முக்கிய வேடத்தில் நடித்திருந்த சஜின் கோபு என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இவர் தற்போது பஷில் ஜோசப் கதையின் நாயகனாக நடித்து வெளியாகி உள்ள 'பொன் மேன்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தான், ஆவேசம் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதை வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று கூறியுள்ளார். அதே சமயம் ஆவேசம் பட இயக்குனர் ஜித்து மாதவன் அடுத்ததாக மோகன்லாலை வைத்து படம் இயக்க ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தை முடித்துவிட்டு ஒருவேளை ஆவேசம் இரண்டாம் பாகத்தை கையில் எடுக்கலாம் என்று தெரிகிறது.