பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

தெலுங்கில் பிரமாண்டமான வரலாற்று பின்னனியில் உருவாகி வரும் படம் 'கண்ணப்பா' . மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இந்த படத்தை இயக்கி வருகிறார். வரலாற்று பின்னனியில் சிவ பக்தர் கண்ணப்பரை வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
இதில் கண்ணப்பராக விஷ்ணு மஞ்சு நடித்து வருகிறார். காஜல் அகர்வால், பீர்த்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க, மோகன் பாபு, பிரபாஸ், சரத்குமார், மோகன்லால், அக்ஷய் குமார் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்து வருகின்றனர்.
தற்போது இதில் பிரபாஸ் 'ருத்ரா' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அவரின் தோற்றத்தின் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இப்படம் இவ்வருட ஏப்ரல் 25ம் தேதி அன்று பன்மொழிகளில் பான் இந்தியா படமாக திரைக்கு வருகிறது.