ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன், இறைவன் உள்ளிட்ட சில படங்களைக் இயக்கியவர் அஹமத். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இறைவன் படம் தோல்வியை சந்தித்தது. இதன் பிறகு இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் இவர் மீண்டும் ரவி மோகனை வைத்து 'ஜன கண மன' என்ற படத்தை இயக்கி வந்ததாக தெரிகிறது. ஆனால் அந்தபடம் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதையை அஹமத் கூறியுள்ளாராம். இந்த கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்து போனதால் இதில் நடிக்க சிவகார்த்திகேயன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
தற்போது முருகதாஸ், சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தலா ஒரு படமும், சுதா இயக்கத்தில் பராசக்தி படமும் சிவகார்த்திகேயன் கைவசம் உள்ளன.




