இளம் இயக்குனர்களுடன் ரஜினி திடீர் சந்திப்பு | ஐபிஎல் கிரிக்கெட்டில் அனிருத் கச்சேரி | பிளாஷ்பேக் : ஏகாதசி விரதத்தை பிரபலமாக்கிய படம் | துபாயில் அட்லி - அல்லு அர்ஜுன் தீவிர ஆலோசனை | வீர தீர சூரன் OTT-யில் வருமா? வராதா? | நெட்பிளிக்ஸிலும் வரவேற்பை பெற்ற "டிராகன்" | எல் 2 எம்புரான் - முதல் நாள் முன்பதிவிலும் சாதனை | ராஜமவுலி படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிருத்விராஜ் | பதட்டத்துடன் சிக்கந்தர் படப்பிடிப்பை நடத்திய ஏ.ஆர். முருகதாஸ் | ஆஸ்கர் விருதுக்காக நான்காவது குழந்தை பெற்றுக் கொள்ள தயார் : வீர தீர சூரன் நடிகர் புதிய லட்சியம் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆமீர்கான். அவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் நடந்து விவகாரத்து ஆகியுள்ளது. 1986ல் அவரது சிறு வயது தோழியான ரீனா தத்தா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு 2002ல் விவகாரத்து செய்தார். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.
பின்னர் 2005ல் உதவி இயக்குனராக இருந்த கிரண் ராவ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் ஆமீர். அவர்களுக்கு வாடகைத் தாய் முறையில் ஒரு மகன் இருக்கிறார். 2021ல் இருவரும் பிரிந்தனர். இருந்தாலும் கிரண் ராவிற்கு பக்கபலமாக இருக்கிறார் ஆமீர்கான். அவர் இயக்கிய 'லபாட்டா லேடீஸ்' படத்தையும் ஆமீர் தயாரித்தார்.
இந்நிலையில் தற்போது பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வருவதாகவும் விரைவில் அவரைத் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் பாலிவுட் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் 60 வயதை நிறைவு செய்ய உள்ளார் ஆமீர்கான்.