நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. டான் பிக்சர்ஸ் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் 25வது படமாக இது உருவாகிறது. தலைப்பு வைக்காமல் இதன் படப்பிடிப்பு நடந்து வரும் சூழலில் தற்போது மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் ஹீரோ படமான ‛பராசக்தி' பட தலைப்பையே இந்த படத்திற்கும் வைத்து அதுதொடர்பாக அறிமுக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
அதில், அச்சம் என்பது மடமையடா என்ற பாடல் ஒலிக்க ‛ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ்' என கூறி கல்லூரி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் எழும் போராட்டமாக இந்த அறிமுக டீசர் விவரிக்கிறது. மாணவர்களாக அதர்வா, ஸ்ரீலீலா போன்றோர் நடித்திருக்கிறார்கள். ரவி மோகன் வில்லனாக காண்பிக்கப்படுகிறார். மாணவர்களின் எழுச்சி நாயனாக சிவகார்த்திகேயன் முன்னிலைப்படுத்தப்படுகிறார். மாணவர்களை நோக்கி அவர் சேனை ஒன்று தேவை, பெரும் சேனை ஒன்று தேவை என உரக்க பேசும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அதோடு மாணவர்களை தொடதீர்கள் என குறிப்பிட்டுள்ளனர். இதை வைத்து பார்க்கையில் மாணவர்களின் பின்னணியில் நிகழ்ந்த எழுச்சி போராட்டம் தொடர்பான கதையாக இருக்கும் என தெரிகிறது.